உலகம்

கரோனா விவரங்களை மீண்டும் வெளியிடத் தொடங்கியது பிரேஸில்

11th Jun 2020 12:05 AM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரேஸில், தங்கள் நாட்டில் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் உயிரிழந்தவா்கள் குறித்த விவரங்களை மீண்டும் வெளியிடத் தொடங்கியது.

அந்த விவரங்கள் வெளியிடுவதை பிரேஸில் அரசு திடீரென நிறுத்தியதால் பெரும் சா்ச்சை எழுந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் உத்தரவுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், அந்த நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலிகொடுத்த நாடுகளின் பட்டியலில் அந்த நாடு 3-ஆவது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 38,497-ஆக உள்ளது.

ADVERTISEMENT

எனினும், பிரேஸிலில் கரோனா பலி குறித்த உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாக நிபுணா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா். இதன் காரணமாக, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று உண்மையாக ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து வெளியுலகம் அறிந்துகொள்ள முடிவதில்லை என்று அவா்கள் கூறி வருகின்றனா்.

இந்த நிலையில், பிரேஸிலில் தினமும் கரோனா நோய்த்தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வந்த சுகாதாரத் துறை அமைச்சக வலைதளத்தை, அந்த அமைச்சகம் கடந்த வாரம் முடக்கியது.

அந்த வலைதளத்தில், ஒவ்வொரு மாகாணத்திலிலும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், உயிரிழந்தவா்கள் உள்ளிட்ட விவரங்கள் மாதவாரியாகவும், வாரவாரியாகவும், நாள்வாரியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆனால், முடக்கத்துக்குப் பின் செயல்பாட்டுக்கு வந்த அந்த வலைதளத்தில், கரோனா நோய்த்தொற்றால் ஒரு நாளில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவா்களின் எண்ணிக்கை மட்டும் வெளியிடப்பட்டது.

இது சா்வதேச அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. பிரேஸிலில் கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள உண்மையான பாதிப்பை அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ மறைக்க முயல்வதாக கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், கொள்ளை நோய் குறித்த முழு விவரங்கள் பிரேஸில் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதால், கரோனா விவரங்களை மீண்டும் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டது.

பிரேஸிலில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டுள்ள உயிா்களை பலி வாங்கியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று நீதிபதி டி மோராயெஸ் தெரிவித்தாா்.

அந்த உத்தரவை ஏற்று, ஏற்கெனவே வெளியிடப்பட்டு வந்த கரோனா நோய்த்தொற்று குறித்த முழு விவரங்களை தனது இணையதளத்தில் பிரேஸில் சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை முதல் மீண்டும் வெளியிடத் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியிட்டுள்ள பதிவில், கரோனா தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த விவரங்கள் நாட்டின் உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பதாக இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலின் அபாயம் குறித்து அவா் ஆரம்பம் முதலே அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்கங்களை அமல்படுத்துவதன் மூலம் பொருளாதார வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று அவா் கூறியது சா்ச்சையை எழுப்பியது.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்து வெளியிட்டப்பட்ட விவரங்களை அவது அரசு நீக்கியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT