உலகம்

வங்கதேசம் ஆயிரத்தைக் கடந்த பலி

11th Jun 2020 12:48 AM

ADVERTISEMENT

வங்கதேசத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை ஆயிரத்தைத் தாண்டியது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக 37 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பலி எண்ணிக்கை 1,012-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, 3,190 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 74,865-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT