உலகம்

மனித உரிமை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

11th Jun 2020 06:34 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை  வன்முறையில் ஒடுக்குவது குறித்து அவசரக் கூட்டம் நடத்தி, அது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று அமெரிக்க குடியியல் உரிமைகள் ஒன்றியம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த கடிதத்தில், ஐ.நா. அமெரிக்க சமூகத்தின் கோரிக்கையை  ஆதரித்து, அமெரிக்க அரசு மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தன்னை மனித உரிமைக் காப்பாளர் என அழைத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர்,  மனித உரிமைப் பேரிடரை ஏற்படுத்தியவர் ஆவர் என்பதை அமெரிக்காவில் நடந்து வரும் சம்பவத்தை வைத்து தற்போது உணர்ந்து கொள்ளலாம். மனித உரிமைகள் குறித்து பேசி வரும் அமெரிக்கா, மனித உரிமைகளில் தன் பொறுப்புகளை புறக்கணித்து,  மக்களின் உயிரை அலட்சியம் செய்து வருகிறது என்று பிரிட்டனின் தி இன்டிபென்டென்ட் நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  அமெரிக்காவில் பெரிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது, அமெரிக்க அரசு கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

தற்போது,  எங்கெங்கும் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், முன்பு இல்லாத அளவிற்கு குழப்பத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

அமெரிக்க வெளியுறவு அமைச்சரான மைக் பாம்பியோ அடிக்கடி ஜனநாயம் மற்றும் மனித உரிமை குறித்து பிற நாடுகள் மீது குறைக்கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவில், இனவெறி பாகுபாட்டுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் பலர்  மனநிறைவின்மை தெரிவித்துள்ளனர். மாறாக, 10-ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மைக் பாம்பியோ மீண்டும் பிற நாடுகளின் மத நம்பிக்கைச் சுதந்திரத்தை விமர்சித்துள்ளார்.

மனித உரிமைக் கருத்தை தொடர்ந்து பேசி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் உண்மையில், பிறரின் மனித உரிமைகளை மிதித்து, சுய நலன்களைப் பேணிக்காப்பதை, நாம் தற்போது பார்க்கின்றோம்.

தகவல்:  சீன ஊடகக் குழுமம்

Tags : American politicians human rights politicians
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT