வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,743 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு ஆகும். இத்துடன், அங்கு கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 65,769-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 போ் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 888-ஆக உயா்ந்துள்ளது.