ஜூன் 5ஆம் நாள், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலுள்ள பாதை ஒன்றின் பெயர் “கருப்பினத்தவர்களின் உயிரும் உயிரே”என்று மாற்றப்பட்டது.
ஆப்பிரிக்க வம்சாவழியினரின் மனித உரிமை நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதம், இந்தப் பெயரை இப்பாதையில் பெரியதாக எழுத வேண்டும் என்று வாஷிங்டன் மாநகராட்சித் தலைவர் கட்டளை பிறப்பித்தார்.
காவற்துறையினர் வன்முறையைச் செயல்படுத்துவது, இனங்களுக்கிடையே சமமின்மை ஆகியவை குறித்து கடந்த சில நாட்களாக, அமெரிக்காவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மக்களின் மீது காவற்துறையினர் வன்முறையைப் பயன்படுத்தியது தொடர்பான பல்வேறு சான்றுகளும் வெளியாகின.
முதலில், காவல்துறையினரின் வன்முறைக்கு மிக அதிகமாகப் பலியானவர்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களே ஆவர். புள்ளிவிவகாரங்களின்படி, கடந்த 5 ஆண்டுகளில், மினியாபோலிஸ் நகரில், காவற்துறையினரால் தாக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை, வெள்ளை இனத்தவர்களை விட 6 மடங்கு அதிகம். இரண்டாவதாக, காவற்துறையினரால் தாக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விகிதம், வெள்ளை இனத்தவர்களை விட மிக மிக அதிகம். அமெரிக்கச் சட்ட நீதி அமைச்சகம் 2015ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வு ஒன்றின்படி, காவற்துறையினரை அணுகியபோது, 3.5 விழுக்காட்டு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், வெள்ளை இனத்தவர்களில் இந்த விகிதம் 1.4 விழுக்காடு மட்டும். மூன்றாவதாக, வன்முறையைக் கையாண்ட காவற்துறையினருக்கு விதிக்கப்படும் மீதான தண்டனை குறைவு என்பது, இத்தகைய வன்முறை சம்பவங்கள் அடிக்கடி தோன்றுவதற்குக் காரணமாக உள்ளது. 2012ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை, மினியாபோலிஸ் நகரின் காவற்துறையினரின் மீது 2600க்கும் மேலான புகார்கள் உள்ளன. ஆனால், தற்போதுவரை 15 காவற்துறையினருக்கு மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்