சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 8ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீன நிதி அமைச்சகம் மற்றும் சீன வணிக அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர்கள் ஹய்னான் தாறாள வர்த்தகத் துறைமுகத்தின் கட்டுமானத்துக்கான ஒட்டு மொத்தத் திட்டம் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இத்திட்டத்தின் முக்கிய உள்ளடக்கம் “6+1+4”என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் கூறினார்.
தாராள வணிக வசதி, தாராள முதலீடு வசதி, எல்லை கடந்த தாராள மூலதனப் புழக்கம், பணியாளர்கள் தாராளமாக வந்து செல்லுதல், தாராள போக்குவரத்து வசதி, தரவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் உரிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தாராள வணிகத்தில் சரக்கு வர்த்தகத்துக்கு சுங்க வரி நீக்கப்படும். சேவை வர்த்தகத்துக்கு, நுழைவு மற்றும் செயல்பாட்டு அனுமதி வழங்கப்படும். “6+1+4”என்ற அம்சத்தில் உள்ள 1 என்பது, நவீனமயமாக்க தொழில் அமைப்புமுறையை உருவாக்குவதைக் குறிக்கிறது. “4”என்பது, வரி வசூல், சமூக நிர்வாகம், சட்டம், இடர்ப்பாட்டு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகிய துறைகளில் அமைப்பு முறையின் ஆக்கப்பணி வலுப்படுத்தப்படும் என்பதைக் குறிக்கிறது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்