பல்வகை பேரங்காடிகள் மற்றும் சந்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டதையும், வாழ்க்கை இயல்பான நிலைக்கு திரும்புவதையும் முன்னேற்றும் வகையில், ஜூன் 6ஆம் நாள் சீன ஊடக குழுமமும் பெய்ஜிங் மாநகராட்சி அரசும், “புதிய நுகர்வு, வாழ்க்கை நேசிப்பு - பெய்ஜிங் நுகர்வு காலம்” என்ற சிறப்பு நிகழ்ச்சிகளைக் கூட்டாக நடத்தின.
பெய்ஜிங் மாநகரம் 1220 கோடி யுவான் நுகர்வு சீட்டுகளை வழங்கி, புதிய நுகர்வை முன்னேற்றும் கொள்கைகளை வெளியிட்டு, 400க்கும் மேலான முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தும்.
ஜிங்தோங் எனும் இணையதளக் கடையின் பூர்வாங்க புள்ளிவிவரங்களின்படி, 6ஆம் நாள் முற்பகல் 10:00 முதல் பிற்பகல் 1:10 வரை, சீன ஊடகக் குழுமம் நேரலையின் மூலம் விற்பனை செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 140 கோடி யுவான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.