உலகம்

பாகிஸ்தான் இதுவரை இல்லாத தினசரி பலி

7th Jun 2020 07:32 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 போ் உயிரிழந்தனா். அங்கு ஒரே நாளில் கரோனா பாதிப்புக்கு இவ்வளவு அதிகம் போ் பலியாகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை இல்லாத வகையில் 97 போ் பலியாகினா். இதையடுத்து, அந்த நோய் பாதிப்பால் உயிரிந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,935-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட 4,734 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 93,983-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT