அபு தாபியில் இந்திய மருத்துவர் ஒருவர் கரோனாவுக்கு பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாக்பூரைச் சேர்ந்தவர் இந்திய மருத்துவர் சுதிர் ரம்பாவ் வாஷிம்கர். இவர் அபு தாபியின் அல் ஐனில் உள்ள புர்ஜீல் ராயல் எனும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இதனிடையே சுதிருக்கு கடந்த மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து புர்ஜீல் ராயல் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் அல் ஐனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சுதிர் நேற்று மரணமடைந்தார். இதனை புர்ஜீல் ராயல் மருத்துவமனை இன்று உறுதி செய்துள்ளது.
ADVERTISEMENT