உலகம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

4th Jun 2020 11:34 PM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

வடக்கு மலுக்கு மாகாணம், வடக்கு ஹல்மஹேரா மாவட்டத்தில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 அலகுகளாகப் பதிவானது. கடற்கரை நகரமான டொபேலோவுக்கு வடகிழக்கே 89 கி.மீ. தொலைவில் அந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் ஹல்மஹேரா மாவட்டத்தில் உணரப்பட்டன. இதையடுத்து, மக்கள் பீதியுடன் தங்கள் இருப்பிடங்களை விட்டு திறந்தவெளிக்கு அவசரமாக வெளியேறினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT