உலகம்

கரோனா: சீனாவை விஞ்சியது பாகிஸ்தான்

4th Jun 2020 11:40 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பாதிப்பில், அந்தத் தீநுண்மி உருவான சீனாவை பாகிஸ்தான் வியாழக்கிழமை விஞ்சியது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

பாகிஸ்தானில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,688 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, அந்த நாட்டின் தினசரி கரோனா பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இத்துடன், பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 85,246-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், கரோனா பாதிப்பில் சீனாவை பாகிஸ்தான் முந்தியுள்ளது. சீனாவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 84,160-ஆக உள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,770-ஆக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT