உலகம்

பிரேசிலில் ஒரேநாளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி; நேற்று மட்டும் 1,349 பேர் உயிரிழப்பு

4th Jun 2020 12:04 PM

ADVERTISEMENT

 

பிரேசில் நாட்டில் ஒரேநாளில் கரோனா பாதிப்பால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

கடந்த சில தினங்களாக பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக நாள் ஒன்றுக்கு உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் உள்ளது

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,349 பேர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு 32,548 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,84,016 ஐ எட்டியுள்ளது. அந்நாட்டில் சுமார் 1.95 லட்சம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 

அமெரிக்காவை விட பிரேசில் ஒருநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 919 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT