உலகம்

ரஷியாவில் புதிதாக 5,482 பேருக்கு தொற்று; பாதிப்பு 8.40 லட்சத்தை நெருங்கியது!

31st Jul 2020 03:18 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,482 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8,39,981 ஆக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 ஆவது நாடாக ரஷியா உள்ளது. முன்னதாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

இந்நிலையில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் புதிதாக 5,482 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 8,39,981 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 161 பேர் பலியாகியுள்ளதை அடுத்து மொத்த உயிரிழப்பு 13,963 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அதேநேரத்தில் தற்போது வரை 6,38,410 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT