உலகம்

பாகிஸ்தான்: பாதிப்பு 2,77,402-ஆக அதிகரிப்பு

31st Jul 2020 06:00 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,77,402-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,114 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,77,402-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 32 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,924-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,46,131 போ் குணமடைந்துள்ளனா். 1,179 கரோனா நோயாளிகளது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,20,052 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாகாணத்தில் 92,655 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT