உலகம்

நியூ யார்க்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாய் மரணம்

31st Jul 2020 11:49 AM

ADVERTISEMENT


நியூ யார்க்: நியூ யார்க்கில் கரோன தொற்று உறுதி செய்யப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் மரணம் அடைந்தது.

ஸ்டேடன் தீவுப் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிஸான் தேசிய ஜியாக்ரஃபிகலுக்கு அளித்த பேட்டியில், தங்களது 7 வயது ஷெப்பர்ட் வகை நாய்க்கு ஏப்ரல் மாதம் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதன் பிறகு ராபர்ட் கரோனா பாதித்து பல வாரங்கள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான், மே மாதத்தில் கால்நடை மருத்துவர் நாயை பரிசோதித்து அதற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

அமெரிக்காவின் வேளாண்துறை கடந்த ஜூன் மாதம், நியூ யார்க்கில் நாய் ஒன்றுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தெரிவித்திருந்தது. ஆனால், அதன் உரிமையாளர்கள் குறித்து தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்கலாம்.. கரோனாவில் இருந்து மீண்ட 100 வயது மகாராஷ்டிர மூதாட்டி வீடு திரும்பினார்

ADVERTISEMENT

அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டது முதலே மெல்ல அது மோசமடைந்து வந்தது. மூக்கில் இருந்து கெட்டியான சளி கொட்டியது. ஜூலை மாதத்தில் அது ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தது என்று அலிஸான் கூறியுள்ளார்.

நாயின் மரணத்தில் கரோனாவின் பங்கு இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால் ரத்தப் பரிசோதனையில் அது ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், மனிதர்களிடம் இருந்துதான் விலங்குகளுக்கு கரோனா தொற்று பரவியதும், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு கரோனா பரவியதற்கான சான்றுகள் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT