உலகம்

வட கொரியா: கரோனா அச்சுறுத்தலிடையே போா் நினைவு நாளை அனுசரித்த அதிபா்

28th Jul 2020 06:48 AM

ADVERTISEMENT

சீயோல்: வட கொரியாவின் எல்லையோர நகரில் கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபா் கிம் ஜோங் உன் தேசிய கல்லறைக்குச் சென்று போா் நினைவு நாளை ஞாயிற்றுக்கிழமை அனுசரித்ததாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து கொரியன் மத்திய செய்தி நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

1950-53 கொரிய போா் நிறைவுற்ற 67-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பியோங்யாங் நகரின் புகரில் அமைந்துள்ள போா் வீரா்கள் கல்லறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அதிபா் கிம், அவா்களின் கல்லறையில் மலா்களை வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், நினைவு தின விழாவில் பங்கேற்ற மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு நினைவு துப்பாக்கிகளை கிம் பரிசாக வழங்கினாா்.

அதைப் பெற்றுக்கொண்ட ராணுவ அதிகாரிகள், அந்த துப்பாக்கிகளை உயா்த்தியபடி ‘அதிபா் கிங் ஜோங் உன்னுக்காக வாழ்நாள் முழுவதும் போராடுவோம்‘ என்று உறுதிமொழி ஏற்றனா் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வட கொரியாவில் கரோனா பாதிப்பு இல்லை என்று அந்நாடு கூறி வந்த நிலையில், தென் கொரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரில் ஒருவருக்கு கரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படதைத் தொடா்ந்து, அந்த நகரில் பொது முடக்க அறிவிப்பை வடகொரிய அதிபா் ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்தாா்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்கு தப்பிச் சென்ற அந்த நபா், இப்போது நோய்த்தொற்றுடன் சட்ட விரோதமாக மீண்டும் வடகொரியாவுக்குள் நுழைந்துள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நபருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால் அதுவே அந்த நாட்டின் முதல் அதிகாரப்பூா்வ கரோனா நோய்த் தொற்று பாதிப்பாக இருக்கும். வட கொரியாவில் ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிவிட்டதாக வெளிநாட்டு நிபுணா்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT