ஏமனில் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள்.
ஏமனில் அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
மேலும் வெள்ளம் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பல இடங்களில் சேதமுற்றுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹோடைடா மாகாணத்தில் 13 பேர், ஹஜ்ஜா மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.