உலகம்

சீனாவில் தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு கருத்துரையாடல் கூட்டம்

25th Jul 2020 03:13 PM

ADVERTISEMENT

 

அண்மையில், சீனாவில் தொழில் முனைவோர் கருத்துரையாடல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. 

தொழில் நிறுவனங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தின் மூன்று அம்சங்களில் நான் மிகுந்த கவனம் செலுத்துகின்றேன். முதலில், கரோனா வைரஸ் பரவல் காலத்தில், தொழில் நிறுவனங்கள் இன்னல்களைச் சமாளிப்பது எப்படி? இரண்டாவது, வெளிப்புற அழுத்தங்கள் குறிப்பாக, அமெரிக்காவின் தடை நடவடிக்கையை எதிர்நோக்கும் போது, சீனத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி வாய்ப்புகளைத் தேடுவது எப்படி?சீனாவில் உள்ள அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களுக்கான எதிர்கால முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி எப்படி?

கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் தொழில் முனைவோர்கள் புத்தாக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியாவில் டாட்டா குழுமத்தின் கௌரத் தலைமை இயக்குநர் ராடான் டாட்டா தெரிவித்தார். 

ADVERTISEMENT

அதே போல், சந்தையின் நிறுவனங்களின் உயிர் ஆற்றலைப் பாதுகாத்து ஊக்குவிக்க வேண்டும் என்று அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். இது தொடர்புடைய திட்டவட்டமான தீர்வுகளை அவர் வழங்கியுள்ளார். வரி மற்றும் கட்டணம், வாடகை கட்டணம் மற்றும் வட்டியைக் குறைக்க வேண்டும். வாடகை கட்டணம், வரி மற்றும் கட்டணம், சமூகக் காப்புறுதி, நிதி திரட்டல் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், சுய தொழில் புரியவர்களுக்கு ஆக்கப்பூர்வமாக உதவி செய்ய வேண்டும். மேலும் நேரடியான, பயனுள்ளன ஆதரவு கொள்கையுடன் அரசு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

தற்போது, சீனா மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. முதலில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் சுங்க வரி வசூலித்து வருகிறது. இரண்டாவது, சீனாவுக்கு உயர் தொழில் நுட்பம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதிக்கிறது. 

இத்தகைய பிரச்சினை உண்மையிலேயே மிகவும் கடுமையாக விளங்குகிறது. இதற்கிடையில் இந்தியாவில் நிறுவனங்களின் செல்லிடப் பேசிகள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. ஆனால், இத்தகைய செல்லிடப் பேசிகளின் சில்லு மற்றும் இயக்க அமைப்புமுறையை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. சில்லுகளின் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்தால், சீனாவின் தொழில் நிறுவனங்கள் இத்தகைய பிரச்சனைகளை எப்படி செயல்படும் என்ற கேள்விக்கு சீன அரசுத் தலைவர் ஷின்ச்சிங் தீர்வு வழங்கியுள்ளார்.

தொழில் சங்கிலி வினியோகத்தின் நவீனமயமாக்க நிலையை மேம்படுத்தி, அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தைப் பெரிதும் முன்னேற்றி, மிக முக்கிய தொழில் நுட்பங்களை வளர்த்து, எதிர்காலத்தில் வளர்ச்சிக்கான புதிய மேம்பாடுகளை வளர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இத்தகைய வெளிபுற அழுத்தத்தைக் கண்டு, சீனத் தொழில் நிறுவனங்களை விட சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அதிகமான கவலை இருக்கலாம்.

வெளிநாட்டுத் திறப்பு கதவை சீனா நிறுத்தப்போவதில்லை. மாறாக, வெளிநாட்டுத் திறப்பு அளவு மேலும் விரிவாக்கப்படும். அதை வெளிப்படுத்தும் மைக்ரோசாஃப்ட், பேனாசோனிக் ஆகிய இரண்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் தனது உரையில் இந்த அறிகுறியை உறுதிசெய்தனர். 

Tags : china
ADVERTISEMENT
ADVERTISEMENT