உலகம்

அமெரிக்காவின் கூட்டணியை சிக்கலில் இருக்க செய்யும் பாம்பியோ

25th Jul 2020 03:16 PM

ADVERTISEMENT

 

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணம் ஜூலை 22-ஆம் நாள் நிறைவுபெற்றது.

பயணத்தின்போது, அவர் ஒவ்வொரு இடங்களிலும், சீனாவிடமிருந்து வந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதமாக புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற கூற்றை வலியுறுத்தி வந்தார்.

பிரிட்டனில் பயணம் மேற்கொண்டபோது, சீனாவின் ஹுவாவெய் தொழில் நிறுவனம் மீது பிரிட்டன் அரசு மேற்கொண்ட தடை நடவடிக்கைக்கு பாம்பியோ பாராட்டு தெரிவித்தார். பாம்பியோ போன்ற சீனாவை எதிர்க்கின்ற அரசியல்வாதிகளால், சீனா-பிரிட்டன் உறவு சிக்கலாகும் என்பதே மட்டுமல்லாமல், இதற்கு விலை தொடுத்து வருபவர், பிரிட்டன் மக்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ADVERTISEMENT

உண்மையில், தேசிய பாதுகாப்புக் கட்டணம், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாய்வு, சர்வதேச நிறுவனங்களைக் கையாளுதல் முதலிய பல துறைகளில், கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் வேற்றுமைகள் இருக்கின்றன. குறிப்பாக, புதிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காலத்தில், ஐரோப்பிய நாடுளுக்கு அனுப்பிய மருத்துவப் பொருட்களை அமெரிக்கா வழிமறித்தது. ஐரோப்பிய குடிமக்கள் அமெரிக்காவில் நுழைவதற்குஅமெரிக்கா தடை விதித்தது. புதிய ரக கரோனா வைரஸை எதிர்ப்பதற்கான சர்வதேச அளவிலான நன்கொடையில் பங்கெடுக்கவில்லை. இத்தகை ஒருதரப்புவாதச் செயல்களினால், ஐரோப்பிய நாடுகள் ஏமாற்றம் அடைந்தன.

அமெரிக்காவுக்கான மதிப்பு, டிரம்ப் அரசு ஆட்சியினால், உலகளவில் விரைவாக குறைந்து வருகின்றது என்று அமெரிக்காவின் தூதாண்மை கொள்கை என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்கும் நிலைமையில், தனது நலனுக்கு இழப்பு ஏற்படாமல், அமெரிக்காவினால் உருவாகும் சிக்கலை தவிர்க்க ஐரோப்பா முயலும் என்று தெரிகின்றது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : US
ADVERTISEMENT
ADVERTISEMENT