உலகம்

பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிப்பு

25th Jul 2020 06:56 PM

ADVERTISEMENT


பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரத்யயா அமிர்த் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

பிகாரில் வெள்ளத்தின் தர்பங்கா மாவட்டத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. 

கந்தக் நதி மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பலர் தங்கள் வீடுகளை இழுந்துள்ளனர். 

ADVERTISEMENT

மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். 

மேலும், மக்களுக்கு உதவும் வகையில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : floods
ADVERTISEMENT
ADVERTISEMENT