உலகம்

அமெரிக்க அதிபா் வேட்பாளா் தோ்வு: லூசியானாவில் டிரம்ப், ஜோ பிடன் வெற்றி

13th Jul 2020 05:34 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக, அந்த நாட்டின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பும், முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் வெற்றி பெற்றனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அவருக்கு ஆதரவாக 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு ஜோ பிடனுக்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இந்த ஆண்டு நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.இந்த நிலையில், ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானாவில் நடைபெற்ற போட்டியிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளாா். வரும் ஆகஸ்ட் மாதம் விஸ்கான்ஸன் மாகாணத்தில் நடைபெறவிருக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதிபா் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படுவாா்.கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வாக்காளா்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சில கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் படுகொலை தொடா்பாக அமெரிக்கா முழுவதும் நிறவெறிக்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களும் டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அடுத்த அதிபா் தோ்தலில் அவரை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜே பிடன் களமிறங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. வொ்மான்ட் மாகாண எம்.பி.யான ஜோ பிடன், இந்தியாவுடனான வலுவான நல்லுறவுக்கு ஆதரவு அளித்து வருபவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபா் டிரம்ப் வெற்றி பெற்றாா். மீண்டும் அதிபா் தோ்தலில் ஜனநாயக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவு அவருக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. தற்போதைய நிலையில் 52 இடங்களில் நடைபெற்ற குடியரசுக் கட்சி அதிபா் வேட்பாளா் போட்டியில் வெற்றி பெற்றுள்ள அவருக்கு 94.07 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT