உலகம்

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2.51 லட்சத்தைக் கடந்தது

13th Jul 2020 04:15 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,625 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 

நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,05,533 பேருக்கும், பஞ்சாபில் 87,043 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கரோனா தொற்று பாதித்துக் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,61,917 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,1266 -ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT