உலகம்

பாகிஸ்தான்: 2,46,351-ஆக உயா்ந்த பாதிப்பு

13th Jul 2020 04:58 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 2,48,872-ஆக உயா்ந்தது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,521 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,48,872-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 74 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 5,197-ஆக அதிகரித்துள்ளது.இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 1,56,700 போ் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். நாட்டிலேயே அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,03,836 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT