உலகம்

உலகக் சுகாதார அமைப்பின் அதிகாரத்தைப் பேணிக்காப்பது முக்கியம்: பிரிட்டன் நிபுணர்

13th Jul 2020 12:46 PM

ADVERTISEMENT

 

பிரிட்டனின் சர்வதேச விவகார ஆய்வாளர் அஃப்தாப் சித்திகி 12ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்திற்கு அளித்த பேட்டியின் போது, உலகச் சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அண்மையில் எடுத்துள்ள தீர்மானம் வருத்தமானது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

உலகின் பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியுடன் வைரஸை எதிர்த்து போராட வேண்டும். ஒரு தனி நாடால் அதை சமாளிக்க முடியாது. கரோனா வைரஸ் நிலவரம் உலக ரீதியிலான அறைகூவல் ஆகும்.

ADVERTISEMENT

சர்வதேசச் சுகாதாரத்தை பேணிக்காப்பதில் உலகச் சுகாதார அமைப்பின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால், அதன் அதிகாரத்தைப் பேணிக்காப்பது வைரஸுடனான போராட்டத்தில் மிகவும் முக்கியமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

 

Tags : UK
ADVERTISEMENT
ADVERTISEMENT