உலகம்

சீனாவின் தென் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு

13th Jul 2020 11:58 AM

ADVERTISEMENT

 

ஜியாங்சி மாநிலத்தின் போ யாங் ஏரி உள்ளிட்ட சீனாவின் தென் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கால் 52 இலட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் அவசரமாக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 4500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. 

ADVERTISEMENT

உள்ளூர் வெள்ளத் தடுப்புப் பணியகம் வெள்ளத்தடுப்பு மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. 

இதைத் தவிர, ஹூபே, ஹூனான் முதலிய மாநிலங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு 11ஆம் நாள் இரவு வரை 48 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்தனர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT