பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மீது சீனா தொடுத்த வழக்கு நடவடிக்கைகள் ஜூன் 15ஆம் நாள் நிறைவடைந்தது.
இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் சில, உலக வர்த்தக அமைப்பின் கட்டுக்கோப்பில் சீனாவுக்குத் தோல்வி என்றும், சீனாவின் சந்தைப் பொருளாதாரத் தகுநிலை, உலக வர்த்தக அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்றும் விளக்கம் கூறியுள்ளன.
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் சட்டப் பிரிவின் அலுவலர் ஒருவர் கூறுகையில், உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பு எதையும் அளிக்க வில்லை. இந்நிலையில் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பான சீன நிலைப்பாடும், உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளின் கட்டுக்கோப்பில் சீனாவின் உரிமைகளும் பாதிக்கப்பட வில்லை என்றும், இவ்வழக்கு, சந்தைப் பொருளாதார அமைப்பு முறை பற்றி சீனாவின் தகுநிலைக்குத் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடான சீனா, பல தரப்பு வர்த்தக முறைமைக்கு உறுதியாக ஆதரவு அளித்து, பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.