உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 1.26 கோடி; பலி எண்ணிக்கை 5.62 லட்சம்

11th Jul 2020 01:06 PM

ADVERTISEMENT

 

ஜெனீவா: உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.26 கோடியை தாண்டியது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5.62 லட்சமாக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பும், கரோனா பலியும் கட்டுப்படுத்த முடியாத வகையில் உயர்ந்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை முடக்கிப்போட்டுள்ளது.

ADVERTISEMENT

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தநிலையில் உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,288 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,31,866 -ஆக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 884 போ் உயிரிழந்தனா். இதனால், ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5,62,921 -ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 73,67,593 போ் குணமடைந்துவிட்டதாகவும் 47,01,352 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்களில் 58,696 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT