உலகம்

கடல் ரீதியிலான ஒத்துழைப்பு பற்றி ஷிச்சின்பிங் ஆலோசனைகள்

11th Jul 2020 03:26 PM

ADVERTISEMENT

 

ஜுலை 11ஆம் நாள் சீனாவின் கடற்பயணத் தினம் ஆகும். சீனா, அதிக நிலம் மற்றும் கடல் பரப்பளவைக் கொண்ட ஒரு பெரிய நாடு.

கடல் ரீதியிலான பொருளாதார வளர்ச்சியும், அறிவியல் ஆய்வும், சீனத் தேசிய நெடுநோக்கு திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். அதனால் மையத் தொழில் நுட்பத்தைத் தற்சார்பாக ஆய்வு செய்ய வேண்டும் என சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2018ஆம் ஆண்டில் கடல் அறிவியல் மற்றும் தேசியத் தொழில் நுட்ப ஆய்வுக்கான ஒரு கூடத்தில் சுட்டிக்காட்டினார்.

பெருங்கடல், மனிதச் சமூக வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கிருந்து தான் உயிரினங்கள் தோன்றின, உலகம் இதனால் இணைக்கப்பட்டது, மனித வளர்ச்சியும் தூண்டப்பட்டுள்ளது என்று அவர் 2019ஆம் ஆண்டில் சீனக் கடல் பொருளாதாரப் பொருட்காட்சிக்கான வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

தற்போது பல்வேறு துறைகளில் கடல் வழி ஒத்துழைப்பு நெருங்கி வருகிறது. 21ஆம் நூற்றாண்டின் கடல் வழி பட்டுப்பாதை முன்மொழிவை சீனா முன்வைத்தது. இதன் மூலம், கடல் வழி தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கடல் ரீதியிலான பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு இணைப்பை முன்னேற்றி, இன்ப வாழ்வைக் கூட்டாக உருவாக்க வேண்டுமெனவும் அவர் கடந்த ஆண்டில் பன்னாட்டுக் கடற்படை அதிகாரிகளைச் சந்தித்த போது தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

Tags : Shi xinping
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT