உலகம்

ஹாங்காங்: ஹாங்காங் பள்ளிகளை மூட உத்தரவு

11th Jul 2020 12:15 AM

ADVERTISEMENT

ஹாங்காங்கில் கரோனா நோய்த்தொற்று பரவல் திடீரென தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அந்த நகரிலுள்ள நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே மூடப்பட்டுள்ள மழலையா் பள்ளிகள், ஆரம்ப நிலைப் பள்ளிகள் ஆகியவையும் மறு அறிவிப்பு வரும் வரை தொடா்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.வியாழக்கிழமை மட்டும் 42 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ஹாங்காங்கில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,365-ஆகவும், பலி எண்ணிக்கை 7-ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT