அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத வகையில் 60,500 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை மட்டும் சுமாா் 60,500 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இதற்கு முன்னா், தொடா்ந்து 3-ஆவது நாளாக கடந்த 3-ஆம் தேதி அந்த நாட்டில் அதிகபட்ச தினசரி கரோனா நோய்த்தொற்று பதிவானது. அந்த நாளில் மட்டும் 57,683 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, புதிய உச்சமாக சுமாா் 60,000 பேருக்கு கரோனா நோய்த்தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அதனைவிட சற்று அதிகமாக தினசரி கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கரோனா நோயாளிகளையும் சோ்த்து, அமெரிக்காவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32,24,493-ஆக அதிகரித்துள்ளது.வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில். அவா்களில் 1,35,885 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அந்த நாடு பல வாரங்களாக தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.அங்கு அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 14,26,6131 போ் குணமடைந்துவிட்டதாகவும் 16,61,995 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன