தற்போது, சீன மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி, சர்வதேசச் சமூகத்தின் பொதுவான புரிந்துணர்வு மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள், இச்செயலை மனித உரிமை மீறல் என்று கூறியுள்ளன. இக்கூற்று, இன்னலில் சிக்கியுள்ளவர்களை பாதிப்பதோடு, மருத்துவ ஒழுக்கவியலை பழிக்கும் கருத்தும் ஆகும்.
தற்போது, வூஹான் நகரவாசிகள் பயணத் திட்டத்தை நீக்கி, வீட்டில் தடைக்காப்பு செய்கின்றனர். அவர்கள் உண்மையான செயல்கள் மூலம், நோய் பரவல் கட்டுப்பாடு பற்றி அரசின் நடவடிக்கைகளுக்கான புரிந்துணர்வு மற்றும் ஆதரவைக் காட்டுகின்றனர்.
பல்வேறு இடங்களைச் சேர்ந்த நேசமுள்ள ஆற்றல் வூஹானில் ஒன்று கூடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், வூஹானில் அன்றாட வாழ்க்கைத் தேவைப் பொருட்களும் மருத்துவ வினியோகமும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன.
இந்த கோணத்தைக் கருத்தில் கொண்டு, நோய் பரவல் கட்டுப்பாடு, ஒரு கண்ணாடியைப் போன்று, வெளிப்படையானது. சீனர்களின் ஒற்றுமை மற்றும் மனித உரிமைக்கான கவனத்தைக் காட்டுவதை விடுத்து, சில மேலை நாடுகளின் ஊடகங்கள் திரித்து கூறும் செய்தி அவர்களின் கேட்டான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்