சீனாவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து சுமார் 6000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீனத் தேசியச் சுகாதார ஆணையம் 28ஆம் நாள் காலை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், தற்போது பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவக் குழுக்களும் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு, ஹூ பெய் மாநிலத்துக்கு உதவி வழங்கி வருகின்றன.
இதுவரை, பல்வேறு பிரதேசங்களிலிருந்து சுமார் 6000 மருத்துவப் பணியாளர்கள், ஹூ பெய் சென்றடைந்து இத்தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திபெத் பிரதேசம் தவிர, அனைத்து மாநிலங்களின் மருத்துவ உதவிக் குழுக்களும், ஹூ பெய் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ச்சாங் ச்சுன் 27ஆம் நாள் ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் சந்தித்து, புதிய ரக கரோனா வைரஸால் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி பற்றி, சீனா மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்கினார்.
குட்ரேஸ் கூறுகையில், இம்முக்கிய தருணத்தில் ஐ.நா, சீன அரசு மற்றும் மக்களுக்கு முழு மனதுடன் உதவுவதில் ஐ.நா உறுதியாக இருக்கிறது. சீனா மேற்கொண்டு வரும் முயற்சியைப் பாராட்டி, நோய் பரவாமல் தடுக்கும் சீன ஆற்றல் குறித்து முழு நம்பிக்கையை ஐ.நா மேற்கொள்கிறது. இயன்றளவில் சீனாவுக்கு ஆதரவையும் உதவியையும் வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்