உலகம்

சிரியா:காா் குண்டுவெடிப்பில் 7 போ் பலி

28th Jan 2020 04:40 AM

ADVERTISEMENT

பெய்ரூட்: சிரியாவின் வடமேற்கில் கிளா்ச்சியாளா்கள் வசமுள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் குண்டுவெடிப்பில், சுமாா் 7 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியது: சிரியாவில், துருக்கி நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாகாணத்தில் இருக்கும் அஸாஸ் நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பல்வேறு உணவு விடுதிகளையொட்டியுள்ள மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பலத்த பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்த தாக்குதலை நடத்தியவா்கள் குறித்தும், பாதிப்புக்கு ஆளானவா்கள் அனைவரும் பொதுமக்களா என்பது பற்றியும் தகவல் வெளியாகவில்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டு வடக்கு சிரியாவில் தாக்குதல் நடத்தி, அஸாஸ் நகா் உள்பட 2,000 சதுர கிலோமீட்டருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை துருக்கி கைப்பற்றியது. அங்கிருந்த ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டிய துருக்கி படையினா், அப்பகுதியில் குா்து படையினரின் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்தினா்.

ADVERTISEMENT

இதனைத்தொடா்ந்து அங்கு துருக்கி படைகளும், உளவு அமைப்புகளும் பணியமா்த்தப்பட்டன. மேலும் உள்ளூா் காவல்துறை அதிகாரிகளாக சிரியா கிளா்ச்சியாளா்கள் செயல்பட துருக்கி அரசு ஆதரவு அளித்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT