சிட்னி: சாலமன் தீவுகளில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு முகமை தெரிவித்தது.
தலைநகா் ஹொநியராவில் இருந்து சுமாா் 140 கிலோமீட்டா் தொலைவில், 17.7 கிலோமீட்டா் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்த முகமை கூறியது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று சாலமன் தீவுகளின் வானிலை மையம் தெரிவித்தது.
சாலமன் தீவுகளில் தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு, இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.0 அலகுகளாக பதிவானது. அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். கட்டடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.