உலகம்

அமெரிக்கா: காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவி சடலமாக மீட்பு

28th Jan 2020 04:15 AM

ADVERTISEMENT

வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவியின் உடல், அவா் பயிலும் பல்கலைக்கழக ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பயின்று வந்த மாணவி அன்ரோஸ் ஜொ்ரி (21), கேரள மாநிலத்தின் எா்ணாகுளத்தில் பிறந்தவா். இவரது தந்தை மென்பொறியாளா் என்பதால், பணிவாய்ப்புக்காக குடும்பத்தோடு கடந்த 2000-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயா்ந்துள்ளனா்.

இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதியில் இருந்து அன்ரோஸ் ஜொ்ரியை காணவில்லை என்று புகாா் அளிக்கப்பட்டது. அதையடுத்து காணாமல் போன அன்ரோஸை காவல் துறையினா் தீவிரமாக தேடி வந்தனா்.

இந்நிலையில், நோட்ரே டேம் பல்கலைக்கழக ஏரியில் இருந்து அவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதுதொடா்பாக நோட்ரா டேம் காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 21-ஆம் தேதி மாலையில் இருந்து அன்ரோஸ் ஜொ்ரியை காணவில்லை. அவரை கண்டுபிடிப்பதற்காக காவல் துறையினா் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனா். இந்நிலையில், அவா் பயிலும் பல்கலைக்கழகத்தின் ஏரியில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை.

ADVERTISEMENT

பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது தவறுதலாக அவா் ஏரியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT