உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: நேபாளம்

25th Jan 2020 04:43 PM

ADVERTISEMENT


காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என நேபாளம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேபாள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில்,

"எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதைத் தீர்க்க அமைதிப் பேச்சுவார்த்தையே சிறந்த வழியாகும். முரண்களும், வேறுபாடுகளும் இருக்கலாம். ஆனால் அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். அமைதியை விரும்பும் சுதந்திரமான நடுநிலை நாடாக இருப்பதால் தேவைப்பட்டால் நாங்கள் மத்தியஸ்தராக செயல்படத் தயார்.

இந்தப் பேச்சுவார்தைக்கு நாங்கள் கருவியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இருதரப்பும் நேரடியாகத் தொடர்பு கொண்டால் அது சிறந்ததாக இருக்கும்" என்றனர்.

ADVERTISEMENT

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்னைக்குத் தீர்வு கண்டால், அது சார்க் மாநாட்டை மீட்டெடுக்க வழிவகுக்கும் என நேபாளம் கருதுகிறது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இந்த வார தொடக்கத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது குறித்து மீண்டும் பேசினார். ஆனால், இந்த முறையும் காஷ்மீர் விவகாரத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பு தலையீட்டுக்கும் இடமில்லை என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வதாகத் தெரிவித்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nepal
ADVERTISEMENT
ADVERTISEMENT