உலகம்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்து வந்த சீன மருத்துவர் மரணம்

25th Jan 2020 03:43 PM

ADVERTISEMENT

 

பெய்ஜிங்: சீனாவின் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கரோனா வைரஸ் பாதித்து மரணம் அடைந்துள்ளார். மருத்துவத் துறையில் முதல் உயிரிழப்பாக இது கருதப்படுகிறது.

சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். 1,287 பேர் வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 237 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

ஸின்ஹுவா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்த லியாங் வுடோங் (62) இன்று காலை 7 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) மரணம் அடைந்தார் என்று சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

கடந்த வாரம் இவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

வேகமாகப் பரவும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க வுஹான் உட்பட 12 இதர நகரங்களில் ராணுவத்தின் மருத்துவத் துறையை சீன அரசு களமிறக்கி வருகிறது. அதன்படி, ராணுவத்தில் பணியாற்றும் மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவி செய்யுமாறு ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து 40க்கும் மேற்பட்ட ராணுவ மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT