உலகம்

சீனப் புத்தாண்டை முன்னிட்டு பெய்ஜிங்கில் கலை நிகழ்ச்சி

25th Jan 2020 11:11 AM

ADVERTISEMENT

 

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்திருந்த 2020ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சியில், பாடல், நடனம், மாய வித்தை, சாகசம், இசை நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. 

சீனாவில் பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகளில், “அன்பு பாலம்” என்ற தலைப்பிலான ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

பெய்ஜிங்கில் மட்டுமல்லாமல், சீனாவின் பிற மாநிலங்களிலும் சீனப் புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 5G தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் இக்கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ரஷியா, பிரேசில், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, தாய்லாந்து, லாவோஸ் முதலிய 170க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 500 செய்தி ஊடகங்களிலும், 20க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் திரைப்பட அரங்குகளிலும், இக்கலை நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பப்பட்டன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT