உலகம்

புதிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி பற்றிய முக்கிய கூட்டம்

25th Jan 2020 06:44 PM

ADVERTISEMENT

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தரக் குழு 25ஆம் நாள் கூட்டம் நடத்தி, புதிய ரக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி பற்றிய அறிக்கையைக் கேட்டறிந்து, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணி தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

நோய் நிலைமையைச் சமாளிப்பதற்காக தலைமைக் குழுவை நிறுவுவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஹுபெய் மாநிலத்திலுள்ள நோய் தடுப்பின் முன்னணிக்குப் பணிக் குழு ஒன்று அனுப்பப்படும். 

பொது மக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் உடல் நலத்தை முதன்மை இடத்தில் வைத்து, நோய்யைக் கட்டுப்படுத்தும் பணியை மிக முக்கிய பணியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஷி ஜின்பிங் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். வைரஸ் பரவலைத் தடுக்கும் போரில் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் மனவுறுதி அளித்தார்.

ADVERTISEMENT

நோய்யைக் கட்டுப்படுத்தும் பல்வகை நடவடிக்கைகள் பற்றி இக்கூட்டத்தில் ஆராயப்பட்டு பரவல் தடுப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT