உலகம்

இன்று மன அழுத்தம் அதிகமாக உள்ளதா? ப்ளூ மண்டே காரணமாக இருக்கலாம்

20th Jan 2020 01:39 PM

ADVERTISEMENT

 

இன்று (திங்கள்கிழமை) காரணமின்றி உடலும் மனமும் சோர்வாக உள்ளதா? இதற்குக் காரணம் ப்ளூ மண்டேவாக இருக்கலாம் என்கிறார்கள் உளவியலாளர்கள். இன்று உலகளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருப்பது இந்த ப்ளூ மண்டே. 

ப்ளூ மண்டே என்ற சொல் முதன்முதலில் 2005-ஆம் ஆண்டு  ஸ்கை டிராவல் செய்திக் குறிப்பில் பயன்படுத்தப்பட்டது. விடுமுறை முன்பதிவு செய்ய சரியான நாள் என்று அவர்களுடைய விளம்பரத்தில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.

ADVERTISEMENT

உண்மையில் உளவியலாளர் டாக்டர் கிளிஃப் அர்னாலின் சிந்தனையில் தோன்றியது இது.  ஜனவரி மாதத்தில் வரக்கூடிய மந்தமான தினங்களை ப்ளூஸ் என்று அழைக்கத் தொடங்கியவரும் அவர்தான்.

அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்த சில நாட்கள் கழித்து, வானிலை மந்தமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில்,  ஆண்டின் மோசமான அத்தகைய நாளில் வேலை செய்ய வேண்டிய நிலைதான் ப்ளூ மண்டே என்கிறார்கள் அமெரிக்கர்கள்.

எவ்வாறாயினும், அர்னால் தனது ஃபார்முலா, அடிப்படையில் போலி விஞ்ஞானம் என்று ஒப்புக் கொண்டார் மற்றும் ப்ளூ மண்டே பற்றிய "முழு கருத்தையும் மறுக்க" மக்களிடம் கூறியுள்ளார்.

Tags : Blue Monday
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT