உலகம்

ஈரானில் 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் விபத்து

8th Jan 2020 09:23 AM

ADVERTISEMENT

 

ஈரான் தலைநகரில் இருந்து 180 பேருடன் புறப்பட்ட உக்ரைனின் போயிங் 737 வகை விமானம் புதன்கிழமை விபத்துக்குள்ளானது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், விமான விபத்து தொடர்பான பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் விபத்து தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT