ஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உடனான போர் பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, ஆங்காங்கே ஆயுதங்களுடன் கூடிய பாதுகாவலர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக, இராக் தலைநகர் பாக்தாத் நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அல் ஆசாத் மற்றும் இர்பில் விமானப்படை தளங்கள் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணைகளை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.