உலகம்

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

8th Jan 2020 12:58 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

குவெட்டா நகரின் தென்மேற்குப் பகுதியிலுள்ள லிக்கத் கடை வீதி அமைந்துள்ள இடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் அருகில் இந்த குண்டு வெடிப்பு நடந்தது. 

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இதையடுத்து குண்டு வெடிப்பு நடந்த பகுதியை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். மேலும் மருத்துவமனைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT