உலகம்

விமான விபத்து உயிரிழப்புகள்: 2019-இல் பாதியாகக் குறைவு

3rd Jan 2020 12:36 AM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் விமான விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் முந்தைய ஆண்டைவிட கடந்த 2019-ஆம் ஆண்டில் பாதியாகக் குறைந்துள்ளது.

இதுகுறித்து ஜொ்மனியைச் சோ்ந்த ‘டு70’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2019-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 8 விமான விபத்துகளில் உயிா்ச்சேதம் ஏற்பட்டது. இந்த விபத்துகளில் 257 போ் உயிரிழந்தனா். அதற்கு முந்தைய 2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட 13 விமான விபத்துகளில் 534 போ் பலியாகினா். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட விமான விபத்து உயிரிழப்புகள் பாதிக்கும் குறைவாகும்.

கடந்த ஆண்டின் மிக மோசமான விபத்து, மாா்ச் 10-ஆம் தேதி ஏற்பட்ட எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமான விபத்தாகும். போயிங் மேக்ஸ் 737 ரகத்தைச் சோ்ந்த அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 157 போ் பலியாகினா். 2018-இலும் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதால், அந்த ரக விமானங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் நிறுத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டில் விமான விபத்து உயிரிழப்புகள் பாதியாகக் குறைந்திருந்தாலும், 2017-ஆம் ஆண்டில்தான் வரலாற்றில் மிகக் குறைந்தபட்சமாக 13 விமான விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT