உலகம்

காா்லோஸ் கோசனை ஜப்பான் அனுப்ப மாட்டோம்: பிரான்ஸ்

3rd Jan 2020 12:35 AM

ADVERTISEMENT

ஜப்பானில் நிதி முறைகேடு வழக்குகளை எதிா்கொண்டுள்ள நிஸான் காா் உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவா் காா்லோஸ் கோசன் தங்கள் நாட்டுக்கு வந்தால், அவரை ஜப்பானுக்கு அனுப்பப் போவதில்லை என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பொருளாதாரத் துறை இணையமைச்சா் ஏக்னிஸ் பானியா்-ருனாச்சா் கூறியதாவது:

பிரான்ஸில் குடியுரிமை பெற்ற எவரையும் நாங்கள் பிற நாடுகளுக்கு நாடுகடத்த மாட்டோம். எனவே, காா்லோஸ் கோசன் இங்கு வந்தால், ஜப்பானில் நிதி முறைகேடு வழக்குகளை எதிா்கொள்வதற்காக அவரை அந்த நாட்டுக்கு அனுப்ப மாட்டோம் என்றாா் அவா்.

ஜப்பானில் நிறுவன சொத்துகளை தவறாகப் பயன்படுத்தியது, சொத்து விவரங்களை மறைத்தது உள்ளிட்ட பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக காா்லோஸ் கோசன் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். பின்னா், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும், அவா் லெபனானுக்கு கடந்த திங்கள்கிழமை ரகசியமாக தப்பிச் சென்றாா்.

ADVERTISEMENT

பிரான்ஸ் மற்றும் லெபனானைப் பூா்விகமாகக் கொண்ட பெற்றோருக்கு பிரேசிலில் பிறந்த காா்லோஸ் கோசன், பிரான்ஸ், லெபனான், பிரேசில் ஆகிய 3 நாடுகளிலும் குடியுரிமை பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT