தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூத்த ராணுவ அதிகாரி உட்பட 3 பேர் மாயமாயினர்.
தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் யுஹெச்-60 எனும் ராணுவ ஹெலிகாப்டர் தைபெய்யில் இருந்து யிலான் நோக்கி இன்று காலை புறப்பட்டது. ஹெலிகாப்டர் யிலான் அருகே உள்ள மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டபோது விபத்தில் சிக்கியது.
இதில் மூத்த ராணுவ அதிகாரி ஷென் யீ மிங் உட்பட 3 பேர் மாயமாயினர். 10 பேர் மீட்கப்பட்டனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.