உலகம்

மெக்சிகோவில் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: 16 பேர் பலி

1st Jan 2020 02:56 PM

ADVERTISEMENT

மெக்சிகோவில் சிறையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் 16 பேர் உயிரிழந்தனர். 

மெக்சிகோவின் வடக்கு மாகாணமான சகாடெகாஸில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 15 கைதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT