உலகம்

தாடி, மீசை வைத்திருந்தால் கரோனா பரவும் ஆபத்து அதிகம்: ஆய்வு

29th Feb 2020 04:20 PM

ADVERTISEMENT


கரோனா பாதித்தவர்களுடன் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் தாடி, மீசையை எடுத்து விடுவது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் வைத்திருக்கும் தாடி, மீசை காரணமாக கரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம் இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் ஆண்களின் தாடி அல்லது மீசை மூலம் பரவும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், மருத்துவத் துறையில் பணியாற்றும் நபர்கள், முன்னெச்சரிக்கையாக தாடி, மீசையை எடுத்துவிடுவது நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக முகக் கவசம் அணிந்து, கையுறை அணிவது கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காக்கும் அடிப்படை விஷயங்களாக இருந்தாலும், கரோனா பாதித்தவர்களுடன் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் இதனை கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT