சீனாவின் ஹெங்டொங் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி கருப்பு பூஞ்சை அறுவடையை விவசாயிகள் விரைவாக செய்து வருகின்றனர்.
சீனாவின் ஹுநான் மாநிலத்தின் ஹெங்டொங் மாவட்டத்தின் கிராமம் ஒன்றில், கருப்பு பூஞ்சை(ஒரு உண்ணக்கூடிய காட்டு காளான்)என்ற வேளாண் பொருட்களின் உற்பத்தி தளம் அமைந்துள்ளது.
இந்த உற்பத்தி தளத்தில் சுமார் நூறு கிராமவாசிகள் வயல்களில் இந்தப் பொருட்களை அறுவடை செய்து வருகின்றனர். புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்புக் காலத்தில், இம்மாவட்ட அரசுப் பணியாளர்கள், இணைய நேரலை மூலம், கருப்பு பூஞ்சை உள்ளிட்ட வேளாண் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க முயன்று வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்