உலகம்

பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்:ஷிச்சின்பிங்

26th Feb 2020 08:01 PM

ADVERTISEMENT


கொவைட்-19 நோய் பாதிப்பைக் கடுமையாகச் சமாளிப்பதோடு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பணிகளையும் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தரக் கமிட்டி 26ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதில் கூறுகையில், 

"தற்போது நாடளவில் கொவைட்-19 நோய் தடுப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி மீண்டு வருகிறது.

இருப்பினும், ஹூபெய் மாநிலம் மற்றும் வூஹான் நகரில் நோய் பரவல் தடுப்புப் பணி இன்னும் சிக்கலான நிலையிலே உள்ளது. அதனால், நோய் பாதிப்பைக் கடுமையாகச் சமாளிப்பதோடு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பல்வேறு பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும். 

ADVERTISEMENT

குறிப்பிட்ட வசதி வாய்ந்த சமூகத்தை முழுமையாகக் கட்டியமைத்து, வறுமை ஒழிப்பு இலக்கை நனவாக்கப் பாடுபட வேண்டும்" என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

ADVERTISEMENT
ADVERTISEMENT